பணம் சம்பாதித்துவர
வேலைக்கான புறப்பாடு.
நினைவிருக்கிறதா,
ஆகஸ்டின் முதல்வாரம்!
நிலவில்லாத வெளிச்ச இருள்.
இரவு
நெடுமூச்சாய் கறுப்பு தார்ச்சாலை.
சன்னத்தூறலொடு சிலபோது மின்னல்கள்.
குடைபிடித்து, ஒண்டி...
மவுன பாஷையில்
நீயும் நானும்
சுற்றம் சூழ!
ரசித்தேன்- உன்மேல் ஏதோ
ஒரு சுகந்த மணம்!
'சொல்லி விடலாமா?'
வேதனையான மவுன முகங்களில்...
கண்களில்...
நம் அமைதியில்...
'இப்போதேனும் சொல்லிவிட வேண்டும்!'
நீ துடித்தாய்
நானும்தான்!
ஆனால்,
பேசவில்லை, உறவினர்கள்
பஸ்ஸேற்றி விட்டார்கள்.
அதற்குள் நீ...!
Friday, July 31, 2009
தவிக்கும் மனது!
சட்டைப்பையில்
சில்லரைக் காசுகள் இல்லாத
பேருந்துப்பயணங்களில்
முகத்தின் முன் யாசகத்திற்காய் நீளும்
கரங்களைக் கூட சிலசமயம்
தவிர்த்துவிட முடிகிறது.
அதற்காகத் தவிக்கும்
மனதைத்தான் சமாதானப்படுத்தமுடியவில்லை
எப்போதும்!
சில்லரைக் காசுகள் இல்லாத
பேருந்துப்பயணங்களில்
முகத்தின் முன் யாசகத்திற்காய் நீளும்
கரங்களைக் கூட சிலசமயம்
தவிர்த்துவிட முடிகிறது.
அதற்காகத் தவிக்கும்
மனதைத்தான் சமாதானப்படுத்தமுடியவில்லை
எப்போதும்!
Subscribe to:
Posts (Atom)