Friday, September 11, 2009
நனைந்து கொண்டே
தனியாய் நடக்கலாம்.
பெய்து கொண்டிருக்கிறது
மழை!
மழையின் போதெல்லாம்
மனம் விரும்புவதில்லை
குடையை...
தவிர்க்க முடியாமல்
எப்போதும்
பிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
சில சமயங்களில் தோன்றும்
முன்னெப்போதையும் விட
மழை பெய்யும் போது மட்டுமே
பூக்கள்
அழகாய் இருப்பதாய்!
வேதனைதான்
மழை பெய்யும் போதெல்லாம்
-உன் நினைப்பும் அருகில் இல்லாததும்.
மறக்கவே முடியாது
மழை பெய்த ஓர்நாளில்
நீ அழுததும்
அழுகையினூடே
விரக்தியாய் சிரித்ததும்!
பாழாய்ப்போன
வேலை எப்போது கிடைக்கும்?
லேசாய் நனைந்த
ஒரு மழை நாளில்
சற்றே விலகிய உன்
தலை முடியில் இருந்து இறங்கி...
முகம் விழுந்து... உருண்டு...
மார்பு நனைந்த ப்ளவுஸில் சில மழைத்துளிகள்...
ம்...ஒன்றுமில்லை!
உன் வருகை எதிர்பார்த்து
காத்திருப்பேன்.
என் துக்கங்களை
மேலும் தீவிரப்படுத்த
சில வேளைகளில்
மழை வந்ததுண்டு...
உனக்கு பதிலாய்!
அன்புடன்ப.
மதியழகன்
Subscribe to:
Post Comments (Atom)
நன்று நன்று கவிதை நன்று
ReplyDeleteகாதல் ரச்ம் சொட்டுகிறது மழைத்துளியாய்
ம்...ஒன்றுமில்லை! - ஆயிரம் பொருள் பொதிந்த வரிகள்
நல்ல கற்பனை வளம் - வாழ்க
நல்வாழ்த்துகள் மதியழகன்