இருளும் புழுக்கமும் நிறைந்ததாக இருக்கிறது
என் வசிப்பிடம். எப்போதாவது கனவுகளில்
யாரோ துரத்துகிற அவலமும் நடக்கிறது.
ஓசித் தேநீரும், மசாலா வடைகளும்
வயிறு நிறைப்பதாக இருப்பதோடு
பழக்கமும் ஆகி விட்டது. பேருந்திலிருந்து இறங்கி
பல கடைகளையும், சாக்கடைகளையும் தாண்டிவருவது
புதியவர்களுக்கு
அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.
எனக்கில்லை.
சட்டையில்லாத பிள்ளைகள் முகத்தில் சளி ஒழுக
குடிசைகளின் வெளியிலிருக்கும்கோரைப்பாய்களில் அமர்ந்து
கதறிக் கொண்டிருப்பதுசிலருக்கு எரிச்சல் தரலாம்.
என் வாழ்வும் அது என்பதால்
எனக்கில்லை. தள்ளாட்டமான இரவுகளில்
தெரு நாய்கள் மோப்பம் கண்டு விலகிவிடும்.
இலக்கில்லாமல் எப்போதும் போல விடியற்காலையில்
கிளம்பிவிடும் என்னை அந்தக்காட்சி ஈர்த்தது.
கழிவுப்பொருட்களை இட்டு நிரப்பிய
குப்பைத் தொட்டியருகே ஒட்டப்பட்டசினிமா போஸ்ட்டரொன்றில்
நமீதாவின் மார்புமீது
அழுக்குத் துணிகளால் நிரம்பி வழிந்த ஒரு தாடியுள்ள பிச்சைக்காரன்
சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்!
Thursday, August 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உங்களது பேனா சரியான தடத்தில் இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றாக இருக்கிறது - கவிதை
ReplyDeleteஇன்னும் இந்த சூழ்நிலை கிராமங்களில் நிலவுகிறது
மாறும் - மாறிவிடும்
நல்வாழ்த்துகள் மதியழகன்